ஐபிஎல், தொடர் முடிந்ததும், வீரர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்கள் என உறுதி.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15- ஆம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானத்தை அனுமதிக்க வேண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சொந்த ஏற்பாடுகளின் படியே நாடு திரும்ப முடியும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேபோல், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால், தொடர் முடிந்ததும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ உறுதி செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் எனத்தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், தொடர் முடிந்ததும், வீரர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்கள் என உறுதி அளித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.