ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று பெரும் போராட்டம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரிஷாத் பதியுதீனின் கைதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சிறுபான்மையினச் சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே தாம் வீதியில் இறங்கி நிற்கின்றோம் எனவும், இதன்படி ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யாவிட்டால் நாடு பூராகவும் போராட்டத்தை நடத்துவோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வவுனியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான கே.இராசலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.