கொரோனா நிலைமையால் உப தபால் அலுவலகங்கள் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையால் உப தபால் அலுவலகங்களைத் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும் என்று தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, சனிக்கிழமை தோறும் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாத்திரமே திறக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.