மேல் மாகாணத்தில் அசுர வேகத்துடன் கொரோனா! – வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்கள்

மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் அனைத்தும் நோயாளர்களால் நிறைந்துள்ளன என்று மாகாண சுகாதாரத்துறை செயலாளர் காமினி தர்மசேன தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் இடம் இல்லாததால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவர்களில் ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோர் பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.