கொரோனா: சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம்

கொரோனா தொற்றின் வேகம், அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

​01. கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

02. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

03. வெசாக், ரமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.

04. ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

05. அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத்தரவேண்டும்.

06. தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.

07. பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும்.

08. மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல் போசன விருந்துபசாரம், மே 21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.

09. அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.

10. மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது.

11. சிறைக் கைதிகளை பார்வையிட முடியாது.

12. நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்க வேண்டும். மக்கள் வருகைதரமுடியும்.

13. இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுமையாக தடை.

14. மே 04 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.

மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்​கொண்டு அது திருத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.