முஸ்லிம் கைதிகளுக்கு ரமழான் மதக்கடமைகளை செவதற்காக மகஜர் கையளிப்பு.

ரமழானில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதில் கொரோனாக் காரணமாக உரிய வசதிகள் வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் நீதி அமைச்சர் அலி மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியவர்களுக்கு அனுப்பிய மகஜரினால் பலன் கிட்டியுள்ளதாகவும் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம் கைதிகள் மற்றும் ஏனைய முஸ்லிம் கைதிகள் யாவரும் சுகாதார வழிமுறைகளுடன் தமது சமயக் கடமைகளை இலகுவான முறையில் சரிவரச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் என அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
சிறையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு இந்த ஆண்டு கொரோனாக் காரணமாக தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு உரிய வசதிகள் வழங்க மறுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படப வேண்டும் என்று சிறைக்கைதிகளின் பெற்றோர்கள் வை. எம். எம். ஏ பேரவைக்கு முன் வைத்த முறைப்பாட்டை அடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி மகஜர் ஒன்றை அனுப்பியதற்கு இணங்க அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவை முக்கியஸ்தர்களையும் மற்றும் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் அத்தியட்சர்களையும் சிறைச்சாலைகள் ஆணையாயளர் அவரது அலுவலகத்திற்கு வர வழைத்து நடத்திய கூட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் முஸ்லிம் சிறைக்கைதிகள் சுகாதார வழிமுறைகளுடன் இலகுவான முறையில் தமது சமயக் கடமைகளைச் செய்வதற்கான ஒழுங்குகளை ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அக் கூட்டத்தில் பணிப்புரை விடுத்துள்ளர் என்று வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி இதனைத் தெரிவித்தார்.
நோன்பு நோற்பது ஒரு முஸ்லிமின் முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும். ரமழானில் ஒரு முஸ்லீம் கட்டாயம் பிரார்த்தனைகளிலும் மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு கடமைகளை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு நோன்பைத் தொடங்கவும் முடிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அது அவர்களின் உரிமை. .முந்தைய காலங்களில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் , வசதிகள் எல்லாம் விளக்கமறியலில் மற்றும் ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்பட்டன. இம்முறை அந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே முஸ்லிம் கைதிகளுக்கு ரமலான் மாதத்தில் அவர்களின் மதக் கடமைகளை மதித்து அவர்களுக்கு தேவையான சமயக் கடமைகளைச் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி அமைச்சர் அலி சப்ரி , இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் சிறைச்சாலை ஆணையாளருக்கு நாங்கள் அனுப்பிய கடித்தைத் தொடர்ந்து குறித்த கடிதம் தொடர்பில் எமது கோரிக்கையின் பரிசீலனை செய்து உடன் நடவடிக்கையினை மேற்கொண்ட அமைச்சர் அலி சப்ரி , இராஜாங்க லொஹான் ரத்வத்த. சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோருக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதா அவர் தெரிவித்தார்.

அவை மட்டுமல்ல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ள கைதிகள் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அக் கூட்டத்தில் ஆணையாளர் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இணங்க அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே சுகாதார வழிமுறைகளுடன் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.