கமல் தோல்வி : வானதி சீனிவாசன் வெற்றி

கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன்1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் தோல்வி அடைந்தார்.

தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியுள்ளார்.

இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதலில் முன்னிலையில் இருந்த கமல் திடீரென பின்னடைவை சந்தித்தார். பின்னர் மீண்டும் முன்னிலை , பின்னடைவு என மாறி வந்த நிலையில், கடைசியில் பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார்.

Leave A Reply

Your email address will not be published.