யாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் 3 ஏ பெறுபேறு பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களில் தமிழ்மொழி மூலம் கணிதப் பிரிவில் தோற்றிய 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய 4 பேரும், உயிரியல் தொழிநுட்பப் பிரிவில் தோற்றிய ஒருவரும், மேலும் ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்களில் கணிதப் பிரிவில் 4 பேருமாக 21 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் 32 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 66 மாணவர்கள் 1 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.