இந்திய சமுத்திரத்தில் சீன ராக்கெட் பாகங்கள் விழுந்தன

கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பிய சீனாவின் இராட்சத ரொக்கெட் சிதைவுண்டு இந்திய பெருங்கடல் பகுதி
யில் விழுந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

பூமிக்கு திரும்பும்போது இந்த ரொக்கெட்டின் பெரும்பகுதி அழிந்த நிலையில் எஞ்சிய பாகங்களே கடலில் விழுந்திருப்பதாக சீனாவின் அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது. அதன் பாகங்கள் மாலைதீவுக்கு மேற்காகவே விழுந்துள்ளன. கட்டுப்பாட்டை இழந்த
லோங் மார்ச்-5பி என்ற இந்த வாகனம் விழுந்த இடம் பற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவும் கண்காணித்து வருகிறது.

பீஜிங் நேரப்படி நேற்று ஞாயிற்றுக் கிழமை 10.24 மணி அளவிலேயே இந்த ரொக்கெட் பூமியை நோக்கி விழுந்ததாக சீன அரச ஊடகம் தெரிவித்தது. ‘அரேபிய தீபகற்பத்திற்கு மேலால் லோங் மார்ச்-5பி ரொக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்கு மீண்டும் திரும்
பியது உறுதி செய்யப்பட்டது’ என்ற அமெரிக்க விண்வெளி கட்டளையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த ரொக்கெட் பூமியை நோக்கி வரும் நிலையில் அதன் பாகங்கள் மக்கள் வாழும் பகுதியில் விழும் அச்சம் இருந்து வந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ரொக்கெட்டை பூமியை நோக்கி விழுவதற்கு விடுவதில் சீனா அலட்சியமாக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டிக் சாடிஇருந்தார்.எனினும் இந்த ரொக்கெட் பாகம் ஒன்று ஒருவரின் மீது விழுவதற்கான சாத்தியம் மிகக் குறைவானது என்று நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

உலகின் பெரும் பகுதி கடல் மற்றும் மனிதர் வாழாத நிலங்களாக இருப்பதே இதற்கு காரணமாகும். சீனா தயாரிக்கும் விண்வெளி நிலையத்திற்கான முக்கிய பாகங்களை எடுத்துக் கொண்டே இந்த ரொக்கெட் கடந்த மாதம் விண்வெளிக்குச் சென்றது. 18 தொன் கொண்ட இந்த ரொக்கெட், கடந்த பல தசாப்தங்களில் கட்டுப்பாட்டை இழந்து பூமிக்கு விழும் மிகப் பெரிய பொருளாக இருந்தது.

இந்த பொருளின் பயணப் பாதையை கண்காணித்து வருவதாகவும் அதனை சுட்டுவீழ்த்த திட்டம் இல்லைஎன்றும் அமெரிக்கா கடந்த
வாரம் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதைப்போன்ற ஒரு ரொக்கெட் பாகம் ஓராண்டுக்கு முன் புவியில் விழுந்தபோது, அதன் குழாய் அமைப்பு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டில் கண்டறியப்பட்டது.

இந்த ரொக்கெட் பாகம் விழுவதால் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்து தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மிகைப் படுத்தப்பட்டவை என்று விமர்சித்த சீன ஊடகம், ஏதோ ஒரு பெருங்கடற் பரப்பில் இந்த சிதைவுகள் விழும் என்று கூறியது.

Leave A Reply

Your email address will not be published.