அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் டீசேர்ட்டில் பிரபாகரன் படம் : கடற்படை விசாரணை ஆரம்பம்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட ‘டீசேர்ட்’ அணிந்திருந்தமை தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பினுள் கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த டீசேர்ட்டில் புலிகளின் தலைவரின் பெயரும் , படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த கடற்படையினர், அவர்களை ஒளிப்படம், காணொளிகள் எடுத்த பின்னர் அவர்களை விடுவித்தனர். தற்போது குறித்த காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.