பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளரின் ரமழான் செய்தி.

உலகையும் எமது நாட்டையும் நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா தொற்றினால் ஒரு கடுமையான நெருக்கடியான கால கட்டத்தில் புனித ரமழான் நோன்பினை நோற்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ரமழான் மாதம் பல சிறப்புக்களையும் படிப்பினைகளையும் கொண்ட மாதமாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டமாதம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஷைத்தானின் தீங்களிலிருந்து விடுதலையளிக்கப்பட்ட மாதம். நன்மையின் வாயல்கள் திறக்கப்பட்ட மாதம். இத்தகைய பல நல்ல சிறப்புக்களை கொண்ட மாதத்தில் அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டின் சுகாதார விதிமுறைகளைப் பேணி புனித ரமழான் மாதத்தின் சிறப்புக்களை உயிர்ப்பித்தவர்களாகவும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றவர்களாகவும் இப்பெருநாளை கொண்டாடும் எம்மிடையே சமத்துவம் சகோதாரத்துவம் சுபீட்சம் ஐக்கியம் தழைத்தோங்கச் செய்யும் திருநாளாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாடு உள்ள சூழ் நிலையில் முஸ்லிம்களாகிய நாங்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டும் எனவும் ரமழான் மாதத்தில் பேணி வந்த நற்பண்புகளையும் நற்செயல்களையும் இறையச்சத்தையும் வாழ்நாள் முழுக்க பேணி நடக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.