அக்குறணை பிரதேச சபையின் தவிசாளரின் ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த இனிய பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாடும் உலக நாடுகளும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறவும் சுவிட்சமான வாழ்வு மலர்ந்திடவும் நாம் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தன்னுடைய நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ரழமான் மாதம் ஒரு கண்ணியமான மாதமாகும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

புனிதமிகு அல்குர்ஆன்அருளப்பட்ட மாதம். இம்மாதத்திலேயே ஆயிரம் மாதங்களைவ விட சங்கைமிக்க லைத்துல் கத்ர் இரவு அமைந்துள்ள மாதம். அதன் பகற்பொழுது நோன்பிலும் இராப்பொழுது வணக்கத்திலும் ஈடுபட்டு பரஸ்பர அன்பும் பாசமும் பரிமாறப்படும் மாதம். எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமையையும் தக்வாவையும் ஊட்டி வளர்க்கும் மாதம். இத்தகைய சிறப்புமிக்க உன்னதமான மாதத்தை கழித்து விட்டு இன்று நாம் உள மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் எம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்வது மிகவும் அவசியமாகும்.

அதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் கொரோனா தொற்றுத் தொடர்பான அறிவுரைகளை உள்ளீர்த்து கொண்டு நோய்த் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் அனவைரும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இன்றைய இனிய நன்நாளில் எமது நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டுமொரு தடவை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.