முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு! – கூட்டமைப்பின் எம்.பிக்கள் பங்கேற்பு

இறுதிக்கட்டப் போரின்போது அரச படைகளால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடாளுமன்றத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

உயிரிழந்த உறவுகள் நினைவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.