மாளிகாவத்தை சூட்டில் காயமடைந்த நபர் பலி!

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்செத செவன குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் குறித்த நபர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை காலமும் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இவர் குறித்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே குடியிருப்புத் தொகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.