வலைக்குள் சிக்கிய சிறுத்தை

காட்டு விலங்குகளை வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பி வலைக்குள் சிறுத்தை ஒன்று இன்று காலை (12) சிக்கியுள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையிலுள்ள சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வலையில் சிக்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசியேற்றி உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.