பிரதான குற்றவாளிகளின் மறைவிடம் பாராளுமன்றமேயாகும் : அனுரகுமார திசாநாயக்க

நாட்டிலுள்ள பிரதான குற்றவாளிகள் மறைந்திருக்கும் இடமாக நாடாளுமன்றம் மாறியுள்ளது எனத் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களை வெறுப்புடன் பார்ப்பதற்கு இதுவே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இதனால், அதற்கான பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Comments are closed.