கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சிறுமிக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சிறுமிக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்றுள்ளார். அவரைப் பெற்றோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதையடுத்து உயிரிழந்த சிறுமியின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குப் பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின்போது சிறுமிக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

அதனால் சிறுமியின் சடலத்தைக் கொரோனா சுகாதார விதிமுறைகளின்படி நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.