வைரமுத்துவுக்கு அந்த கௌரவமான விருதை கொடுப்பதா?

வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது கிடைத்திருப்பது குறித்து அறிந்த நடிகை பார்வதி ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார். பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு எப்படி அந்த விருதை கொடுக்கலாம் என்கிறார்.

பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மலையாளி அல்லாத ஒரு படைப்பாளிக்கு ஓ.என்.வி. விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த விருது குறித்த செய்தி அறிந்த பிரபல நடிகை பார்வதி நாயர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஓ.என்.வி. சார் நம் பெருமைக்குரியவர். ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவம் அவர் ஆற்றிய பங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.

அவரின் படைப்புகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளுக்கு ஈடே இல்லை. அதனால் தான் அவர் பெயரில் இருக்கும் இப்படிப்பட்ட கௌரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.

பார்வதியின் ட்வீட்டுக்கு லைக்குகள் வந்து குவிகிறது. முன்னதாக வைரமுத்துவுக்கு விருது கிடைத்திருக்கும் செய்தியை பார்த்த பாடகி சின்மயி வாவ் என்று ட்வீட் செய்தார்.

வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி புகார் தெரிவித்தார். ஆனால் அந்த புகார் தொடர்பாக இதுவரை ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த திமுக எம்.பி. கனிமொழியிடம், மிஸ்டர் வைரமுத்துவுக்கு எதிராக நானும், 16 பெண்களும் கொடுத்த பாலியல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் மேடம் என தெரிவித்தார் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.

சசி இயக்கிய பூ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த கேரளாவை சேர்ந்த பார்வதி. மனதில் பட்டதை தைரியமாக பேசுவதற்கு பெயர் போனவர். அவர் தனுஷின் மரியான் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார். தமிழ், மலையாளம் தவிரித்து இந்தி படத்திலும் நடித்திருக்கிறார் பார்வதி.

Leave A Reply

Your email address will not be published.