சம்மாந்துறையில் அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள கல்லரிச்சல் ஆற்றில் கைத்துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் லொறியொன்றில் மண் ஏற்றப்பட்டு அதனை அந்த பகுதியிலுள்ள குடிமனைப்பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டுள்ள போது , மண்ணிலிருந்து பொலித்தீன் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பாவிக்கூடிய நிலையில் இருப்பதாகவும், இது அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.