திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனை.

நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று வியாழக்கிழமை (3) காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

நானாட்டான் பிரதேசத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று வியாழக்கிழமை (3) காலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

குறிப்பாக பயணத் தடை நாட்களில் வெளியில் நடமாடுகின்ற மற்றும் கடமை நிமிர்த்தமாக சென்ற அரச உத்தியோகத்தர்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள் என 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பேரூந்து நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த நடவடிக்கையில் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் , நானாட்டான் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.