தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகும் .

மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை பெற மின்னஞ்சல் முகவரியான tnschooledu21@gmail.com என்ற முகவரிக்கு கருத்துக்களை பகிரலாம் எனவும், 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்த நிலையில் நேற்றும் இன்றும் கருத்துகள் பெறப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நாளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நாளை மறுதினம் தமிழக அரசு சார்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகத்தில் நடத்துவதா? அல்லது ரத்து செய்யப்படுகிறதா ? என்பது தொடர்பு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.