கன்னட மொழி அழகற்றதா? – மன்னிப்புக் கோரியது கூகுள் நிறுவனம்

கன்னட மொழி அழகற்றது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மன்னிப்புக் கோரியது கூகுள் நிறுவனம்.

கூகுள் தேடல் பகுதியில் இந்தியாவில் அழகற்ற மொது எது என்று கேட்டால், அது கன்னடம் என்று பதிவிடப்பட்டிருந்தது.

இது மொழி குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் தாயகமாகவும், வளமான பாரம்பரியம், புகழ்பெற்ற மரபு மற்றும் தனித்துவமான கலாச்சாரம் கொண்டது கன்னட மொழி. உலகின் பழமையான மொழிகளில் ஒன்று கன்னடம். அந்த மொழியை அழகற்றது என்று குறுவதா என்று அரசியல் பிரமுகர்கள், கன்னடர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கன்னடம் மொழியை அழகற்ற மொழி என்று பதிவிட்டிருந்த அந்த பக்கத்தை நீக்கியுள்ள கூகுள் நிறுவனம், மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

கன்னடம் அழகற்ற மொழி என்று கூறிய கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கூகுள் தேடல் பக்கத்தில் இந்தியாவில் அழகற்ற மொழி எது என்று கேட்டால், அது கன்னடம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது மொழியை அவமதிப்பு செய்யும் செயல். பெரும் வருத்தமளிப்பதாக உள்ளது.

மேலும் கன்னடம் மட்டுமல்ல எந்த மொழியும் அழகற்ற, மோசமான மொழி இல்லை. எல்லா மொழிகளும் அழகானதும் உணர்வுகளுடன் தொடர்புடையது என்று குமாரசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.