தற்கொலைக்கு முயன்ற இளைஞர் முகநூல் கொடுத்த எச்சரிக்கையால் மீட்பு

கை நரம்புகளை வெட்டி தற்கொலை செய்ய முயன்ற தில்லியைச் சேர்ந்த நபரை, முகநூல் நிறுவனம் தகவல் கொடுத்து, தில்லி காவல்துறைக்கு துரிதமாக செயல்பட்டதால் உயிருடன் மீட்கப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து, தில்லி காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதால், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 39 வயது நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேற்கு தில்லி துவாரகாவில் வியாழக்கிழமை இரவு அந்த நபர் கை நரம்புகளை வெட்டி தற்கொலைக்கு முயன்றார். 2016-ஆம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, அவரது மனநிலை அவ்வப்போது பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நிலையில், தனது தற்கொலையை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். இதைப் பார்த்த முகநூல் நிறுவனம் தில்லி காவல்துறைக்கு தகவல் கொடுக்க, அந்த முகவரிக்கு அருகே ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் அவரது வீட்டுக்கு அனுப்பி, அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.