தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்: முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டு

கஸ்தூரிபாய் காந்த் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மே 26-இல் தீ விபத்து ஏற்பட்டபோது துரிதமாக செயல்பட்டு அனைவரது உயிர்களையும் காப்பாற்றிய செவிலியலர் ஜெயக்குமாரை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

“சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் 2-வது தளத்தில் கடந்த மே 26-ம் தேதி இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மார்களும் என மொத்தம் 47 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்தையடுத்து, பணியிலிருந்த செவிலியர் ஜெயக்குமார், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமாரை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து, அவரது செயலைப் பாராட்டி சிறப்பு செய்தார்.”

இந்த சந்திப்பின்போது ஜெயக்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.