இன்று 3,094 பேருக்குக் கொரோனா! – 2 இலட்சத்தைத் தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் இன்றும் 3 ஆயிரத்து 94 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 2 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 132 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.