சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் பலி; பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 8 மாவட்டங்களில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார் எனவும், இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்தோடு 11 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன எனவும், 724 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற மண் சரிவுகள் காரணமாக 8 உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம், மாதம்பை பிரதேசத்திலும், ஹொரணையிலும் வெள்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.