தேசிய சேமிப்பு வங்கியினால் நடமாடும் சேவை முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொவிட் 19 நிலையினை கருத்திற்கொண்டு அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டுடனான இக் காலகட்டத்தில் பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி கிளையினால் (NSB), நடமாடும் ATM சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி குறித்த ATM நடமாடும் சேவையானது இடம்பெற்றுவருகின்றது.

கொவிட் சூழ்நிலையில் மக்களின் பணத்தேவையினை கருத்திற்கொண்டு இச்சேவையானது குறித்த வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களது நன்மை கருதி இச்சேவையானது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.