மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவி தீயில் கருகி சாவு! – தற்கொலையா எனப் பொலிஸார் விசாரணை

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப் பரவலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் 3ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று தீப் பரவல் ஏற்பட்டது.

மொரட்டுவை பிரதேச சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனினும், குறித்த மாணவி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை மொரட்டுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.