பழங்குடி மக்களுக்கு உதவிக்கரம்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் பயணக் கட்டுப்பாடு காரணமாக உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரடியாக சென்று நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்துள்ளனர்.

வாகரை பிரதேசத்தின் பழங்குடி மக்களின் தலைவர் அம்பலவர் கே நல்லதம்பி வேலாயுதம் பயணத்தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக தெரிவித்து இலங்கைக்கான ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவிடம் இவ் விடயம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அதனடிப்படையில் பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் தமது வழிகாட்டலில் இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பணிச்சங்கேணி, மாங்கேணி, கிருமிச்சை, குஞ்சன் கல் குளம் மற்றும் கொக்குவில் போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினருக்கு தமது நன்றியை தெரிவித்ததுடன் மேலும் இது போன்ற தமது மக்கள் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.