சுகாதார துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

சுகாதார சேவையாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பானது, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான சுகாதாரப் பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கையுறைகள் மற்றும் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உணவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் 15 சிறுவர் மருத்துவமனைகள் ஆகியவற்றிலுள்ள சுகாதார சேவையாளர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதில்லை என சுகாதார சேவையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரச கதிரியக்க மற்றும் தொழிநுட்வியலாளர்கள் சங்கம், குடும்ப நல சுகாதார சேவை சங்கம் மற்றும் அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரதுறைசார் 26 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.