தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் மானிப்பாயில் சிக்கினார்!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர் கடை உடைத்து கொள்ளையிட்டு வந்த பிரதான நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை, சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள கடைகள் கடந்த சில நாட்களாக உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்கள் திருடப்பட்டு வந்துள்ளன. கடையில் உள்ள பீடி, சிகரெட் முதற்கொண்டு பல பொருட்கள் திருடப்பட்டு வந்துள்ளன.

குறித்த சந்தேகநபர் தனி ஒருவராக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் முகத்தை மூடி மாஸ்க் போட்டு, தலையைச் சுற்றி துணியால் கட்டியபடி சி.சி.ரி.வி. கமாரா முன்னிலையிலேயே பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த கமராப் பதிவுகளை வைத்து பிராந்திய பொலிஸ் புலனாய்வுத்துறையினர், விசேட புலனாய்வுத்துறையினர் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினர் போன்றோர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் நேற்று மானிப்பாய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பெறுமதியான திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

சந்தேகநபர் சங்கானைப் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் எனவும், போதைப் பாவனைக்கு அடிமைப்பட்டதாலே தொடர் திருட்டில் இவர் ஈடுபட்டு வந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.