மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் விழிப்புணர்வு இலவச செயலமர்வு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள பிரிவினரால் மாவட்டத்தில் உள்ள இளைஞர் மற்றும் யுவதிகளை வலுவூட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு செயற்றிட்டமானது தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ZOOM ஊடாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக உயர்தர பாடத்தெரிவுகள், போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த செயலமர்வில் பாடசாலை இடைவிலகியவர்கள், பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்கள், வேலை வாய்ப்பு தேடும் இளைஞர் மற்றும் யுவதிகளை பங்குபற்றி பயனடையுமாறு மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலதிக விபரங்களுக்கு மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ஜெ.துசிராஜ் (077 037 0966) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.