நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சஜித் – கம்மன்பில பேச்சு!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் இவ்விவகாரம் தொடர்பில் நேற்றுமுன்தினம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியபோதே சஜித் இவ்வாறு கோரியுள்ளார்.

“நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்மானம் எடுப்போம். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் 22ஆம் திகதி கூடும். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று இருவரும் சஜித்திடம் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடும் இன்னும் உரிய வகையில் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.