கேரளா மலப்புரம்: காதலிக்க மறுத்த இளம் பெண் கொலை

பெரிந்தல்மன்னா, மலப்புரம்:  சி கே பாலச்சந்திரனின் மகள் த்ரிஷ்யா (21) சட்டத்துறை மாணவி, ஒரு இளைஞனால்  குத்திக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது.

தாக்குதலில் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற முற்பட்ட போது  பெண்ணின் 13 வயது சகோதரியும்  தாக்கப்பட்டு கத்தி குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குற்றம் சாட்டப்பட்டவர் காலை 8 மணியளவில் இளம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த  த்ரிஷ்யாவை கூர்மையான கத்தியால் தாக்கியுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக முத்துங்கல் குடியிருப்பாளரான வினீஷ் வினோத் (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் சந்தேகம் எழுப்பினர்.  த்ரிஷ்யரின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிந்தலமன்னா என்ற இடத்திலுள்ள  பாலச்சந்திரனின் கடைக்கு தீ வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் அந்நேரம் தனது கடக்கு சென்றுள்ளார்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து தாக்கியுள்ளார்.

கொலையாளி வினீஷ், குற்றம் செய்த பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி ஓட முயன்றார் . ஆட்டோ டிரைவர் ஏதோ தவறு நடந்துள்ளதாக சந்தேகித்து, கலையாளியை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  ஒப்படைத்துள்ளார்.

காவல்துறையினர், குற்றவாளியை விசாரித்ததில் கடைக்கு தீ வைத்ததை உறுதிப்படுத்தினர் … விசாரணையின் மத்தியில், வினீஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியதால்  அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .

ஊடகங்களுக்கு பேட்டியளித்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் நஜீப், கொலைசெய்யப்பட்ட பெண்ணிடம் காதல் கோரிக்கை வைக்க ,  அதை  மறுத்ததைத் தொடர்ந்து வினீஷ் கோபமடைந்து இந்த கொடும்செயலுக்கு துணிந்துள்ளான்.

https://www.youtube.com/watch?v=VFkfsj2nVEw

Leave A Reply

Your email address will not be published.