5 நாட்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் – ரொய்டர் செய்தி சேவை

சர்வேதேச ரீதியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 நாட்களுக்குள் ஒரு மில்லியனையும் தாண்டியுள்ளதாக ரொய்டர் செய்தி சேவை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன் கடந்த நான்கு மாதகால பகுதிக்குள் கொவிட் – 19 தொற்றினால் உலகம் பாரிய அழிவை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பிழையான வழியில் பயணிப்பதாக உலக சுகாதார தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் இந்நிலைமை மேலும் உக்கிரமடையும் என உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று துரிதமாக பரவும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.