45 மில்லியன் ரூபா நேரடியாக சஹரான் குழுவுக்கு முதலீடு – பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 45 மில்லியன் ரூபா நேரடியாக சஹரான் தலைமையிலான பயங்கரவாத குழுவுக்கு பணம் வழங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கடந்த 9 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் கடந்த திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அவர் வருகை தரவில்லையெனவும் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வருகை தருமாறு அறவிக்கப்பட்ட போதிலும் அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று கொள்ளவுள்ளதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Comments are closed.