வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்த முடிவு!

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாக இதுவரை எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாவிட்டாலும், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்லப் பிராணிகளை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அண்மையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எரந்திக குணவர்தன இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது,

“தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவரிடமிருந்துதான் சிங்கத்துக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது” – என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.