இங்கிலாந்து ஒருநாள் அணியின்  குழாம் அறிவிப்பு.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து ஒருநாள் அணியின்  குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர், மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது.

இருபதுக்கு இருபது தொடர் வரும் 23 ஆரம்பிக்கவுள்ள நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஜோர்ஜ் கார்டனுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்தின் சசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ஜோர்ஜ் கார்டன் மொத்தமாக 24 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 29 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இலங்கையுடனான T20 போட்டிகளில் உபாதை காரணமாக வாய்ப்பினை இழந்த ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இணைக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.