ரணில் நாடாளுமன்ற முன் வரிசையில் அமரவுள்ளார்

ஐ.தே.கவின் கட்சியில் இருந்து நாளை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியினர் அமர்ந்துள்ள முன் வரிசையில் அமர உள்ளார். அதன்படி, அவர் எதிர்க்கட்சி முன்னணியில் 13 வது இட ஆசனத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

13ம் இலக்க ஆசனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் ஆசனமாகும்.

ரணிலுக்காக, சம்பந்தனின் ஆசனம் 13 லிருந்து 14க்கு மாற்றப்படுகிறது.

ரணிலுக்கு இடது புறம் 14 ம் இலக்க ஆசனத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அமர்கிறார்.

ரணிலுக்கு வலதுபுறம் 12ம் இலக்க ஆசனத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எப்போதும் அமர்கிறார்.

ஆகவே ரணிலுக்கு வலது, இடது புறங்களில் இரண்டு தமிழ் கட்சி தலைவர்கள் அமர்வார்கள்.

Leave A Reply

Your email address will not be published.