கிராமப்புற மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கணினி, செல்லிடப்பேசி வசதிகளை பெற முடியாது. எனவே அந்த மாணவர்களுக்கு ஆன்லைன், எண்மம் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கிராமபுற அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக வேலைக்கு செல்கின்றனர். இதனைத் தடுக்க கிராமப்புறங்களில் ஒவ்வொரு தெருக்களிலும், மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக ஆன்லைன், எண்மம் வசதிகள் செய்து, அப்பகுதியைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நியமித்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.