பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க முடியாது : கல்வி அமைச்சர்.

கொவிட் பரவல் நிலைமை காரணமாக பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி ,பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், மாணவர்களின் உயிருக்கு கூட ஆபத்து காணப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.

விசேட வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து தீர்மானம் எட்டப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த நிலைமையானது, இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலுள்ள பல நாடுகளிலும் காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

மேலும் ,தற்போது நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலையினால், இணைய வழி கல்வி முறைமையே சிறந்தது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.