வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப்பசளை உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கொண்டு செல்லும் திட்டத்திற்கு அமைய வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப்பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருளிட்கு அமைவாக சிறைவாசம் செய்யும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் (26) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டதுடன், பாரிய வேலைத்திட்டமாக கருதப்பட்டும் இச்செயற்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.

அதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மட்டக்களப்பு சிறைச்சாலையை சென்று பார்வையிட்டதுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.