புதுக்குடியிருப்பு வங்கி பணியாளர்கள் இருவருக்கு கொரோனா.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் இருவருக்கு எழுந்தமான பி.சி.ஆர்.பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 22.06.2021ம் திகதி அன்று புதுக்குடியிருப்பு இலங்கை வங்கியின் முன்னால் புதுக்குடியிருப்பு பிரதேச பொது சுகாதார பணிமனையினரால் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளபோது அதன் முடிவுகள் நேற்று(25) வெளியாகியதன் அடிப்படையில் வங்கியில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவநகர் பகுதி மற்றும்யாழ்ப்பாணத்தில் இருந்து பணிக்கு வரும் ஒருவருமாக இரவரே கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாவர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில் வங்கியில் பணியாற்றும் 15 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை (26) புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எவருக்கும் நோற்தொற்றுக்கான அறிகுறி (பொசிட்டிவ்) காட்டவில்லை.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவரையும் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை நீடிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் பொறுப்பற்ற விதத்தினை வங்கியின் முன்னால் காணக்கூடியதாக இருந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.