இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு.

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன.

இதன்படி ,மேல் மாகாணத்தில் இன்று முதல் 70 ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்நிலையில் , அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட ஆகிய இடங்களில் இருந்தும், கம்பஹாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் 11 ரயில் சேவைகள் இன்று இடம்பெறும்.

கரையோர ரயில் பாதையில் அலுத்கம, களுத்துறை தெற்கு, வாத்துவ, பாணந்துறை, மொரட்டுவ, கல்கிஸ்சை ஆகிய இடங்களிலிருந்து 12 ரயில் சேவைகள் இடம்பெறும்.

அதேபோன்று , அவிசாவளை- பாதுக்கைக்கும் இடையில் 5 ரயில் சேவைகள் இடம்பெறும்.

மேலும் , புத்தளம் ரயில் பாதையில் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்புக்கும் இடையில் 8 ரயில் சேவைகள் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.