யாழ். கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! – பெறுமதியான பொருட்கள் சேதம்.

யாழ்., கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் (29) பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.