இலங்கையை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ச மும்மூர்த்திகளும் படுதோல்வி குடும்ப ஆட்சிக்கு மீண்டும் இடமளியாதீர்கள்; ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார வலியுறுத்து

“நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ச மும்மூர்த்திகளுமே படுதோல்வி கண்டுள்ளனர். எனவே, குடும்ப ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“ராஜபக்ச ஆட்சி ஆரம்பமான காலத்தில் மஹிந்த ராஜபக்ச நாட்டை மேம்படுத்துவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியையடுத்து கோட்டாபய ராஜபக்ச வந்தால் சுபீட்சமான நாட்டை உருவாக்குவார் என்றனர். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஸில் ராஜபக்சவைக் கூறுகின்றனர். ஆனால், அவராலும் எதனையும் செய்துவிட முடியாது.

பஸில் ராஜபக்ஸ பிறந்த நாள் முதல் அமெரிக்காவின் – லொஸ்ஏஞ்சல்கள் நகரில் வாழ்ந்து தற்போது இலங்கையின் நிலைமையைக் கண்டு, இங்கு வருகை தந்து நிலைமைகளை மாற்றக் கூடிய மாயாஜாலக்காரர் அல்லர். காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சி ஆரம்பித்த நாள்முதல் அவரே இந்த அரசை நிர்வகித்தார். கொரோனா பரவல் ஆரம்பித்தபோது இரு ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். அந்த இரு செயலணிகளின் செயற்பாடுகளுமே வெற்றிபெறவில்லை” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.