பெருந்தொற்று கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசியே!

பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் தடுப்பூசியே. எனவே, கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது. 30 வயதுக்கு மேற்பட்டவார்கள் அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வேண்டும்.”

அவ்வாறு,கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நாட்டில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 இலட்சம் தடுப்பூசிகளை இதுவரை ஏற்றியுள்ளோம். அடுத்த இரு மாதங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை ஏற்ற முடியும்.

மேலும் ,சில இடங்களில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் பின்னடிக்கின்றார்கள். மக்கள் இவ்வாறு அச்சமடைவது ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தத் தடுப்பூசியில்தான் கொரோனாவை எதிர்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.