கோவிட் தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? இந்திய சுகாதார அமைச்சகம் பதில்

கோவிட்-19 தடுப்பூசி போடுவதால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா என்ற பலரது சந்தேகத்திற்கும் கேள்விக்கும் இந்திய சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

COVID-19 தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மையை வழிவகுக்கும் என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று இந்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்தது.

மேலும், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

COVID-19 தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC), பாலூட்டும் அனைத்து பெண்களுக்கும் கோவிட் தடுப்பூசி போடுவதை பரிந்துரைத்துள்ளது. மேலும், தடுப்பூசிக்கு முன் அல்லது பின் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவோ அல்லது இடைநிறுத்தவோ தேவையில்லை என்றும் இது பாதுகாப்பானது என்றும் கூறுகிறது.

அனைத்து தடுப்பூசிகளும் அவற்றின் கூறுகளும் முதலில் விலங்குகளிடமும் பின்னர் மனிதர்களிடமும் சோதிக்கப்படுவதால், கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் எதுவும் ஆண்கள் அல்லது பெண்களின் கருவுறுதலைப் பாதிக்காது என்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட கேள்விகளில் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தடுப்பூசிகள் அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.