மேலும் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது.

அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 4 மாவட்டங்களில் மேலும் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த, கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.