இறந்த கடலாமை வேலணையில் கரை ஒதுங்கியது!

யாழ்., வேலணை, துறையூர் கடற்கரையில் கடலாமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த கடலாமை இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இலங்கை கடற்பரப்பில் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் எரிந்து விபத்துக்குள்ளான பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் தீவகப் பகுதிகளில் ஒரு திமிங்கலம், ஒரு டொல்பின் மற்றும் மூன்று கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.